கோவை 69வது வார்டு: இன்று முதல் அனைவர் வீட்டிலும் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி!

கோவையில் வீடுதோறும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியை 69 வது வார்டு கவுன்சிலர் பி எஸ் சரவணக்குமார் தொடங்கியுள்ளார்.


கோவை: கோவையில் வீடுதோறும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியை 69 வது வார்டு கவுன்சிலர் பி எஸ் சரவணக்குமார் தொடங்கியுள்ளார்.



பிளாஸ்டிக் பை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மஞ்சப்பை பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவையில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.



இது குறித்து கோவை 69 வது வார்டு கவுன்சிலர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் 5 ஆம் தேதியான இன்று மாலை 5 மணி அளவில் நமது வார்டு காமராஜபுரத்தில் 5 வது வார்டில் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அது சமயம் நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நண்பர்கள், தோழர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். அத்துடன் இன்று முதல் நமது 69 வது வார்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் கவுன்சிலர் ஆகிய நான் செல்லும் நிகழ்ச்சியும், செல்லும் பொழுது மஞ்சள் பைகளை கொடுத்து, வார்டு வீதியில் உள்ள குறைகளை கேட்டு வரும் நிகழ்ச்சியும் தொடங்க உள்ளேன் என்று கூறியிருந்தார்.

மேலும், ஒவ்வொரு வீடாக சென்று அமர்ந்து எல்லோரிடமும் பேசி வருவதற்கு காலம் அதிகம் ஆனாலும், எல்லோர் வீட்டிலும் 2 மஞ்சள் பைகளை கொடுத்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வோம் என்று காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான பி எஸ் சரவணக்குமார் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் திமுக பொறுப்பாளர்கள் ஜார்ஜ் சண்முகம், ஆனந்த், கம்யூனிஸ்ட் தோழர் இளையராஜா, காங்கிரஸ் தோழர்கள் ஆர் கே ரவி, பறக்கும் படை ராஜ்குமார், தென்றல் நாகராஜ், லூயிஸ் குணசேகரன், வெங்கடேஷ், ராவணன், சுரேந்திரன் மற்றும் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...