பேரூர் விவசாய நிலத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் - 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது!

கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகளை 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை பேரூர் அருகே உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகளுடன் முகாமிட்டுள்ள 6 காட்டு யானைகளை 11 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை பேரூர் அடுத்த சென்னனூர் பகுதியில் உள்ள தனியார் விவசாய நிலத்திற்குள் 3 குட்டிகள் உட்பட 6 காட்டு யானைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புகுந்தது. இதையடுத்து காட்டு யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் அதே பகுதியில் முகாமிட்டது.

இதனால் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை வனச்சரக வன ஊழியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் 3 குழுக்களாக பிரிந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முழுவதும் அதே விவசாய நிலத்தில் இருந்த யானை கூட்டத்தை நள்ளிரவு நேரத்தில் வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில், மதுக்கரை வனச்சரக கரடிமடை வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் பத்திரமாக விரட்டப்பட்டது. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தையும் வன ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...