கோவையில் வார்டு எண் 81, 82 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

கோவையில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 81 மற்றும் 82 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 81 மற்றும் 82 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று ஆய்வு செய்தார்.





கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்‌.81 மற்றும்‌ 82 ஆகிய இடங்களில்‌ நடைபெற்று வரும்‌ தூய்மைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப. நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகளில்‌ ஈடுபட வேண்டும்‌ என அறிவுறுத்தினார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.81க்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று பார்வையிட்டு தூய்மைப்‌ பணியாளர்களின்‌ வருகைப் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால்‌ மற்றும்‌ ராஜவீதி ஆகிய பகுதிகளில்‌ உள்ள கடைகளில்‌ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பைகள்‌ பயன்படுத்தப்படுகிறதா என மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார். அதற்கு பொதுமக்கள்‌, வியாபாரிகள்‌ முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்‌ என கேட்டுக்கொண்டார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட டவுன்ஹால்‌ பகுதியில்‌ நடைபாதையில்‌ இருந்த ஆதரவற்ற முதியவரை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ சென்று நலம்‌ விசாரித்து முதியோர்‌ இல்லத்தில்‌ சேர்த்து பராமரிக்க ஏற்பாடு செய்கிறேன்.



அதற்கு உங்களுக்கு‌ விருப்பம்‌ உள்ளதா? என கேட்டறிந்தார்‌.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...