கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட 375 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.1,10,000 பறிமுதல் - 6 பேர் கைது!

கேரளா மாநிலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 375 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் வைத்திருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கேரளா மாநிலத்திலிருந்து பொள்ளாச்சிக்கு கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 375 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவர்கள் வைத்திருந்த ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே கேரளா எண் கொண்ட காரில் இருந்து தமிழக எண் கொண்ட காருக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஒரு கும்பல் மாற்றி வருவதாக மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கார்களை சோதனையிட்ட போது மூட்டைகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 375 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்த இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கேரளா மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த பிரமோத், மனோஜ்குமார், கோவையை சேர்ந்த இடைத்தரகர்கள் காஜா மைதீன், குமரேசன், புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் பொள்ளாச்சியை சேர்ந்த மதியழகன், மணிகண்டன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வரும் கேரளா கும்பல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...