தனியார் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவை: தனியார் உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு ஃபன்மால் அருகே பெண் மீது மோதி நிற்காமல் சென்ற தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரை உணவு டெலிவரி ஊழியர் மோகன சுந்தரம் தட்டிக் கேட்டார். அப்போது அங்கு சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சதீஷ் உணவு டெலிவரி ஊழியர் மோகன சுந்தரத்தின் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து போக்குவரத்து காவலர் சதீஷ் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம் பெற தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ், சுகி பணியாளர் மோகன சுந்தரத்தை கன்னத்தில் அறைந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மோகன சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கையை தெரிவித்து அவர் நலம் பெற வாழ்த்தினேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.