கோவையில் இந்த மாதம் முழுவதும் கலைஞர் பிறந்த நாள் கொண்டாட்டம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்…!

கோவை மதுக்கரை பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற கலைஞர் 99-வது பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக கோவை மதுக்கரை பகுதியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற கலைஞர் 99-வது பிறந்தநாள் விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையேற்றார்.

விழாவில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், சவரம் பொருட்கள், மதுக்கரை அரசு மருத்துவமனைக்கு சக்கர நாற்காலி, தள்ளுவண்டி, அரசி மூட்டைகள், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.



விழாவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. முதல் கையெழுத்தும் தேர்தல் வாக்குறுதியான குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.

மொத்த வாக்குறுதிகளில் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 75-சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் முன்னோடி முதல்வராக திகழ்ந்து வருவதாக புகழாரம் சூட்டினார்.

மேலும்இந்த மாதம் முழுவதும் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுமார் 4-ஆயிரம் இடங்களில் கலைஞர் திரு உருவ படத்திற்கு மலர் மரியாதை செய்யவுள்ளதாகவும், 400-இடங்களில் தெருமுனை கூட்டங்கள் மற்றும் 10- தொகுதிகளில் திராவிடல் மாடல் பயிற்சி பயிலரங்கம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...