கலைஞரின் 99-வது பிறந்த நாள் விழா: கோவை சேரன்மாநகர் சுற்றுப்பகுதிகளில் தி.மு.க.,வினர் கோலாகல கொண்டாட்டம்..!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சேரன்மாநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மூன்று இடங்களில் திமுகவினர் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினர்.



கோவை: முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.



சேரன்மாநகர் முதல் பஸ் ஸ்டாப் அருகே மற்றும் 4-வது பஸ் ஸ்டாப் அருகே உள்ள பகுதிகளில் திமுக கோவை மாநகர் மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் Dr.த.பிரபாகரன் மற்றும் கோவை மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு, கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



பால்காரர் தோட்டம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேற்குறிப்பிட்ட மூன்று நிகழ்ச்சிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞரின் சாதனைகள், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் தமிழக முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் நினைவு கூறி மரியாதை செலுத்தப்பட்டது.



தொடர்ந்து காஞ்சி மாநகர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



மூன்று இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொ.மு.ச., மாநில துணை தலைவர், ரத்னவேலு உட்பட தொண்டர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...