கோவை கிணத்துக்கடவு அருகே லாரி மோதி பைக்கில் சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலி..!

சம்பவம் தொடர்பாக, கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையத்தை சேர்ந்தவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு அருகே சிலிண்டர்களைஏற்றி வந்த லாரி மோதி, பைக்கில் சென்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக,போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கல்யாண மண்டபம் வீதியை சேர்ந்தவர் சண்முகம் வயது (70)இவர் ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழியர் ஆவார். இவர் நேற்று மாலை தனது மொபட்டில் கோவை அருகே உள்ள சூலூர்இந்திய விமானப்படை குடியிருப்பில் வசிக்கும் தனது மகன் மணி (42) என்பவர் புது வீடு கட்டி வருகிறார்.

அந்த வீட்டை பார்வையிடுவதற்காக பைக்கில் திவான்சா புதூரில் இருந்து கிளம்பினார். கிணத்துக்கடவு- கோவைநான்கு வழி சாலையில் உள்ள அரசம்பாளையம் பிரிவு அருகே வந்த போது பின்னால் வேகமாக வந்த சமையல் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி சண்முகம் வந்த பைக் மீது மோதியது . இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று.

விபத்தில் பலியான சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...