கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், கலைஞர் சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனமான "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்" என்ற வரிகளை போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
கோவை: கோவை: இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், கலைஞர்சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனமான "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்", என்ற வரிகளை போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
கோவையின் முக்கியபகுதிகளான ரயில் நிலையம், காந்திபுரம் உக்கடம் போன்ற பகுதிகளில் இந்த போஸ்டரை சுமார் 30 அடி நீளத்திற்கு ஒட்டபடுள்ளது.
பெரிய கடை வீதி பகுதி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சி.எம்.எஸ் மசூது,வர்த்தக அணி துணை அமைப்பாளர் அபுதாஹிர் ஆகியோர் சார்பாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்டுள்ளது.
மாநகரின் முடக்கிய இடங்களில் ஒட்டபடுள்ள 30 அடி நீள போஸ்டர்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.