கோவையில் கலைஞரின் 99வது பிறந்தநாள் கொண்டாட்டம்.

மாவட்ட ஆட்சியர் இன்று பன்னிமடை பகுதியில் உள்ள அவிநாசிலிங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் பணி, உக்கடம் பகுதியில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைக்கவுள்ளார்.


கோவை: முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி யின் 99வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே சமயம், கலைஞர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இன்று பன்னிமடை பகுதியில் உள்ள அவினாசிலிங்கம் கலை அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் பணி, உக்கடம் பகுதியில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு முகாமை துவக்கி வைக்கவுள்ளார்.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நலத் திட்டப் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து ஆட்சியர் பார்வையிடவுள்ளார்.

இந்நிலையில், திமுக கட்சியினர் சார்பில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. கலைஞரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் திமுக வினர் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...