கோவையில் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியர் உயிரிழப்பு: தனியார் நிறுவன தொழில் அதிபர், அவரது மனைவி மீது கொலை வழக்கு பதிவு…!

முதலில், அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதை கொலை வழக்காக பதிவு செய்து, தொழில் அதிபர் நவநீதன், அவரது மனைவி அகிலாவை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரின் வீட்டில், அவரது நிறுவனத்தில் பணிபுரியும் மலர் (37) என்ற பெண் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்த நிலையில், அவர் அளித்த தகவலின் பேரில் விசாரித்த போலீசார், இறந்த பெண் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரும் தலைமறைவாகிய நிலையில், அவர்களை போலீசார் தேடி வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.

முதலில், அந்த பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த பெண் இறந்த பிறகு, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் சம்பவத்தை கொலை வழக்காக போலீசார் மாற்றியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் மலர் (37). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையை கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று அந்த பெண் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்துள்ளார். அவர், நவநீதன் மற்றும் அவரது மனைவியிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால், மருத்துவ செலவிற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர்கள் பணம் தர மறுத்ததால் அந்த பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.

இதில் பலத்த தீ காயங்கள் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அந்த பெண், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கணவரை பிரிந்த வாழ்ந்த தனக்கும், நவநீதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, பாலியல் தொல்லை கொடுத்ததால், தான் கர்ப்பம் அடைந்ததாகவும், இதை அறிந்த நவநீதன், கர்ப்பத்தை கலைக்கும்படி கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், இதேபோல் 6 முறை கர்ப்பத்தை கலைத்து உள்ளேன் என்றும் இந்த விஷயம் அவரது மனைவிக்கும் தெரியும், அடிக்கடி கர்ப்பம் கலைத்ததால் எனது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனவே எனது மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டிற்கு வந்தேன். அப்போது அவர்கள் எனக்கு பணம் தர மறுத்ததுடன், குளியல் அறைக்கு அழைத்து சென்று என் மீது மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். இவ்வாறு பாதிக்கபட்ட பெண் கூறியுள்ளார்.

மேலும் அந்த பெண், தனது மரணத்திற்கு யார் காரணம் என்று பேசிய வீடியோக்கள் மற்றும் கடிதம் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே, தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவியை கைது செய்யக்கோரி, இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில், தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், வழக்கில் தொடர்புடைய நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலாவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...