கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிறுவன் போக்சோவில் கைது…!

விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழனிக்கு, சிறுவன் கடத்திச் சென்று அங்கு ஒரு விடுதியில் தங்கி சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது.


கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி, பழனிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வலைத்தளம் மூலமாக கோவையை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுவனுக்கும், பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு, தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்கு சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சிறுமியை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார் அவரிடம் பேசினர். அப்போது, அவர் பழனியில், இன்ஸ்டாகிராம் நண்பனான அந்த சிறுவனுடன் இருப்பதாக கூறியுள்ளார். உடனே, போலீசாரின் அறிவுரையின் பேரில் சிறுமியிடம் அவருடைய பெற்றோர் பேசி, அவரை கோவைக்கு வரும்படி அழைத்தனர்.

போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்று, கோவை வந்த இருவரையும், துடியலூர் போலீசார் மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழனிக்கு, சிறுவன் கடத்திச் சென்று அங்கு ஒரு விடுதியில் தங்கி சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...