பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார்- அமைச்சர் செந்தில் பாலாஜி!

கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்து கொள்ளும் பக்குவமும் கிடையாது. அவர் பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலில் தமிழகத்தின் தலைநகராக கோவை விளங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விமான நிலைய விரிவாக்கத்திற்கு 3 மாதத்தில் நிலம் எடுக்கும் பணி நிறைவடையும்.

நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் வைத்துக் கொண்டு தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கூறிய அவர், உள்ளாட்சியில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். கலைஞரின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் திருவிழா கோலமாக நடத்த வேண்டும். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும். அதோடு, மக்களுக்கு பயனுள்ள நிகழ்வாக நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 400 இடங்களில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று ஓராண்டு சாதனையை துண்டு பிரசுரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்து சட்டமன்றத் தொகுதியில் திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பாலங்கள் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், குடிநீர் தேவைகளை பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி சரி செய்யப்படும். மேலும் தனியார் பேருந்துகளில் அதிக வேகத்தை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை பிடிக்க பணிகள் விரைவுபடுத்தபட்டுள்ளது. அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.

அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்து கொள்ளும் பக்குவமும் கிடையாது என கூறிய அவர், பத்திரிகையாளர்கள் பக்கத்தையும், தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். முதல்வர் மின்சார உற்பத்தி குறித்து, ஒதுக்கீடு குறித்து பேசியுள்ளார் எனவும், தமிழக வரிகள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. எங்கள் மீது தவறுகள் இருந்து சுட்டிக்காட்டினால் சரி செய்ய தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் மின் இணைப்பு கொடுக்காமல் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தில் மோசடி செய்த சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயியின் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சமீபத்தில் விவசாயி போராடிய செய்தி தவறான கருத்து என்றும், இவை குறித்து விசாரிக்கிறேன் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...