கோவை சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது: அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குறுதி..!

அப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார்.


கோவை: சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

விளாங்குறிச்சி ரோடு, சேரன்மாநகர் அருகே டாஸ்மாக் மதுபான கடை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா. ஆர் கிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி 22-வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு ஆகியோர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்து மனு அளித்தனர்.

இருப்பினும் சமீபத்தில் மீண்டும் அந்த இடத்தில் மதுபான கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



இன்று கோவை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பையா. ஆர் கிருஷ்ணன், கோவை மாநகராட்சி 22-வது மாமன்ற உறுப்பினர் கோவை பாபு அவர்கள் தலைமையில் 22-ஆவது வார்டுக்குட்பட்ட ஶ்ரீ விக்னேஷ் நகர், குமுதம் நகர், டீச்சர்ஸ் காலனி, சக்தி விநாயகர் நகர், ஶ்ரீ சிவசக்தி அவென்யூ, இராகவேந்திரா அவென்யூ, எஸ்.ஆர்.அவென்யூ, ஜே.பி.அவென்யூ, ஶ்ரீ காஞ்சி நகர், கோப்ரேடிவ் காலனி, சேரன் மாநகர், உள்ளிட்ட குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களைச் சந்தித்து 22-ஆவது வார்டு பகுதியில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையினை திறக்க வேண்டாம் என்ற கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.



அப்பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்படாது என குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்தார்.

Newsletter

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...