கோவையில் மர்ம பூச்சி கடித்து 6-வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு..!

கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமி மர்ம பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் மர்ம பூச்சி கடித்து 6-வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பாரதி நகரை சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் கவிஶ்ரீ (6). நீலகிரியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது தேர்வு நிறைவடைந்து பள்ளிகளுக்குவிடுமுறை விட்டுள்ளதால், கடந்த 10 நாட்களாக கோவை காரமடை சின்னபுதூர் பகுதியில் உள்ள குருசாமி தோட்டத்திலுள்ள தனது பாட்டி வீட்டில் கவிஶ்ரீ இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருந்த கவிஶ்ரீக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமியின் பாட்டி உடனடியாக அவரை காரமடை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் தொடர்ந்து சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து உடனடியாக சிறுமி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் சிறுமியின் கால் மற்றும் மூட்டு பகுதியில் மர்ம பூச்சி கடித்தது தெரியவந்துள்ளது. கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்தசிறுமி மர்ம பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...