இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கருப்பராயர் மற்றும் முனியப்பர் கோவில் சிலைகளை மர்ம உடைத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் கிழக்கு புதூர் பகுதியில் பழமையான கருப்பராயர் மற்றும் முனியப்பர் கோவில் அமைந்துள்ளனர். உள்ளூர் மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த கருப்பராயர் மற்றும் முனியப்பர் சிலைகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இன்று அமாவாசையை முன்னிட்டு வழக்கமான வழிபாட்டிற்காக பொதுமக்கள் சென்று பார்த்த போது சிலைகள் சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் போத்தனூர் போலிசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.