ரேஸ்கோர்ஸ் அசோசியேசன் சார்பில் (RANA) ரூ.25,000/- மதிப்பீட்டில் மக்கும் குப்பை மற்றும் மறுசுழற்சி குப்பைகளை தனித்தனியே பிரித்து வாங்கும் வகையில் வழங்கப்பட்ட 50 எண்ணிக்கையிலான குப்பை கூடைகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.66-க்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.06.2024) ரேஸ்கோர்ஸ் அசோசியேசன் சார்பில் (RANA) ரூ.25,000/- மதிப்பீட்டில் மக்கும் குப்பை மற்றும் மறுசுழற்சி குப்பைகளை தனித்தனியே பிரித்து வாங்கும் வகையில் வழங்கப்பட்ட 50 எண்ணிக்கையிலான குப்பை கூடைகளை தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், மண்டல சுகாதார அலுவலர்கள் குணசேகரன், திருமால், ரேஸ்கோர்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் முனைவர்.காமினிசுரேந்திரன், சந்திரசேகர், திவ்யா, சௌமியா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.