தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி சாதனை

தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி இரு பதக்கங்களை வென்றார். இன்று அவருக்கு அவரது குடும்பத்தினர் சார்பில் இனிப்புகள் வழங்கியும் பூங்கொத்து வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.


கோவை: தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி இரு பதக்கங்களை வென்றார்.

கடந்த 24-28 ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 75-வது தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் பந்தயம் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் பல்வேறு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இளம் வயதினருக்கான இந்த போட்டியில், கலந்து கொண்ட இவர் தனிப்பட்ட முறையில் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் தன்யதா, ஸ்ரீமதி, பூஜா சுவேதா ஆகியோர் குழுவாகப் பங்கேற்ற பல்வேறு போட்டியில் வெற்றி பெற்று மூவரும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.



போட்டிகள் முடிந்து இன்று கோவை வந்த அவருக்கு அவரது குடும்பத்தினர் சார்பில் இனிப்புகள் வழங்கியும் பூங்கொத்து வழங்கியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.



Newsletter