துடியலூரில் பூப்பந்து போட்டி - கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி அணி வாகையர் பட்டம்

கோவை துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான பூபந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.



கோவை: கல்லூரிகளுக்கிடையிலான பூபந்து விளையாட்டு போட்டியில் கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது.



கோவை, துடியலூர் அருகே வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2023-24 ஆண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான மண்டல அளவிலான பூபந்து விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

போட்டிகளை இராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆர்.என்.உமா வீரர்களிடம் கைகுழுக்கி போட்டிகளை தொடங்கிவைத்தார். இப்போட்டியில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின.

இதில் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை வென்றது. முன்னதாக இந்த அணி முதல் அறையிறுதி போட்டியில் வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாம் அறையிறுதி போட்டியில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி அணி, கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.



இறுதி போட்டியில் கோவை பி.எஸ்.ஜி.பாலிடெக்னிக் கல்லூரி அணி, கோவை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்து கோப்பையை தட்டி சென்றது.



மூன்றாமிடம் மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அணி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி அணியை வீழ்த்தி மூன்றாமிடம் பிடித்தது.

வெற்றி பெற்ற அணி வீரர்களை கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். இப்போட்டிகளுக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் எம்.அசோக் செய்திருந்தார்.

Newsletter