மசூம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 2023 - இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற கோவை அணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மசூம் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் கோவை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


கோவை: யங் இந்தியன்ஸ் மசூம் கோப்பை 2023 என்பது தேசிய அளவிளான கிரிக்கெட் போட்டியாகும். 5 பிராந்தியங்களில் 56 நகரங்களைச் சேர்ந்த அணிகள் இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும்.

ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் ஒரு குழு தேசிய நிகழ்வான டேக் பிரைட் 2023ல் விளையாடும். யங் இந்தியன்ஸ் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க மசூம் திட்டத்தை உருவாக்கினர்.

இது கடந்த 2015 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் பச்பன் பச்சாவோ அந்தோலனின் நிறுவனருமான கைலாஸ் சத்யார்த்தி அவர்களால் தேசிய அளவில் தொடங்கப்பட்டது. ஒரே நாளில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கான கின்னஸ் சாதனையை யங் இந்தியன்ஸ் பெற்றுள்ளனர். அந்த அமைப்பு நடத்திய கிரிக்கெட் தொடரில் மதுரையில் நடந்த மண்டலப் போட்டிக்குப் பிறகு, முதல் நான்கு இடங்களை பிடித்த கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு மற்றும் புதுச்சேரி ஆகிய அணிகள் முன்னேறின.

லீக் ஆட்டங்களில் சில போட்டிகளுக்கு பிறகு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் எம்.கே இன்ஃப்ரா கோவை மற்றும் எஸ்பிகே ஈரோடு ஈரோ ஸ்டார்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. முதலில் களமிறங்கிய ஈரோடு அணி 15 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்தது. பின்னர் 13.5 ஓவரில் ரன்களை விரட்டிய கோவை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எம்.கே இன்ஃப்ரா கோவை அணியின் வீரர் சசிதரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.கே இன்ஃப்ரா கோவை இப்போது யங் இந்தியன்ஸ் மசூம் கோப்பைக்காக சென்னையில் உள்ள மற்ற 5 பிராந்தியங்களின் அணிகளுடன் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.

Newsletter