ஏழை மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி!

கோவை: ஏழை மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டது. 'டிராக் போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்' (TFSC -Track Force Sports Club) தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச விளையாட்டுப் பயிற்சியை கடந்த 10 வருடத்துக்கும் மேலாக வழங்கி வருகிறது. கோவையில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக கால்பந்து, கைப்பந்து உள்பட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாட்டுப் போட்டிகளையும் 'டிராக் போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்' நடத்தி வருகிறது.

`பிரதர் ஹுட் ட்ராபி' எனும் பெயரில் கடந்த ஐந்து வருடங்களாக தமிழக அளவிலான விளையாட்டுப் போட்டிகளை 'டிராக் போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்' நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்த வருடத்திற்கான 'பிரதர் ஹுட் ட்ராபி- 2020' இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளியில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. கால்பந்து, கைப்பந்து, சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன.

இதில் தமிழகம் முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு 'ட்ராக் போர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்'பின் கோவை மாவட்டத் தலைவர் அர்சத் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் மாநிலத் தலைவர் நாசர் புகாரி உள்பட கலந்து கொண்டனர்.

Newsletter