32வது தேசிய தடகள போட்டி: திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பெண் தங்கப்பதக்கம் வென்று சாதனை!


தமிழ்நாடு தடகள அமைப்பின் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா 32வது தேசிய இளைஞர் தடகள போட்டி கோவை நேரு விளையாட்டரங்கில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாடு முழுவதுமிருந்து சுமார் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இதில், இளையோருக்கான தடகள போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த புனித தெரசா மேல்நிலைப்பள்ளியில் பயிலும் கொலுசியா என்ற மாணவி 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் (டிரைலத்தான்) உள்ளிட்ட போட்டியில் பங்கேற்று சாதனைப் படைத்துள்ளார். மேலும் இதில், தங்கம் வென்ற முதல் தமிழ் பெண் என்ற சாதனையையும் அவர் தட்டிச் சென்றுள்ளார்.



Newsletter