பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்

பள்ளி கல்வித்துறை சார்பில் குடியரசு தினவிழா மண்டல தடகள போட்டிகள் கோவை மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கோயமுத்தூர், பொள்ளாச்சி, குன்னூர் மற்றும் கூடலூர் என நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.



விழாவில், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆனந்தலட்சுமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.



Newsletter