சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தி, மத்திய அரசின் கொள்கைகள் சாமானிய மக்களை பாதிப்பதாக குற்றம்சாட்டினர்.


திருப்பூர்: மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருவதால்,சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது.



திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபால்சாமி தலைமையில், நல்லூர் பகுதியில் தொடங்கிய பிரச்சாரத்தில், ஒன்றிய அரசின் விலை உயர்வு கொள்கைகள் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிப்பதாகவும்,

பாஜக அரசு நூதன கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகபொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நல்லூரில் தொடங்கிய இந்த தெருமுனைப் பிரச்சாரம் காங்கேயம் சாலை, பழைய பேருந்து நிலையம், ராயபுரம், ரயில் நிலையம் மற்றும் மன்னரை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...