ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் பெற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Coimbatore: கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் மற்றும் நகரில் உள்ள அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உள்ள 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 9 தட்டுக்காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டுகாணிக்கை தொகை கணக்கிடப்பட்டது.

இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ரூ.61,65,504 ரொக்கம், 47 கிராம் தங்கம், 201 கிராம் வெள்ளி பெறப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உண்டியல் திறப்பு மற்றும் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் தக்கார் த. ராஜ்குமார், திருக்கோயில் துணை ஆணையர்/செயல் அலுவலர் சு. சுவாமிநாதன், தக்கார் பிரதிநிதிகள், பொள்ளாச்சி சரக ஆய்வர் கோகிலவாணி, ஆனைமலை சரக ஆய்வர் ப. சித்ரா, திருக்கோயில் கண்காணிப்பாளர், கோயில் பணியாளர்கள், சலவநாயக்கன்பட்டி ஊர்ப்பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...

மதுக்கரை சிமெண்ட் ஆலை நச்சுப்புகை: சாலை மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கைது

கோவை மதுக்கரை பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையால் ஆயிரக்கணக்கான வீடுகள் மற்...