இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக இஸ்லாமியர்களை அலைகழிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி காவல்துறையினர், இஸ்லாமியர்களை அலைகழிப்பதாக பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்தனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கினை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை இதுவரை சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களக்க பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறுகயில், இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை துன்புறுத்தி வருகின்றனர். பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கின்றனர்.

விசாரணை என்ற பெயரில் பல முறை தொடர்ச்சியாக அழைத்து பொருளாதார இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து சென்று பல நாட்கள் வைத்துக்கொள்கின்றனர். போனில் யாருடன் பேசினாலும் விசாரித்து மனவுளைச்சளை ஏற்படுத்துகின்னர்" என்றனர். 

மேலும், சிபிசிஐடி காவல்துறையினர் சசிக்குமார் வழக்கை முடிக்கவில்லை என்பதால் பண ஆசை காட்டி இஸ்லாமியர்களை குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கின்றனர் என புகார் அளிக்க வந்த பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இஸ்லாமிய இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அமல்ராஜிடமும் இதுகுறித்தான மனுவினை அளித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...