நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 19-வது நாளாக தொடரும் கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்


அரசு மருத்துமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை தற்போது நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்நிலையில் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து 18 நாளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதனிடையே, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

19-வது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் இன்று நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சங்கங்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் போராட்டத்தை தொடர்வது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...