கோவை-சத்தி சாலையில் மீண்டும் மரண பயணம்: அசுர வேகத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகள்


கோவை-பொள்ளாச்சி சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வழியே செல்லும் பேருந்துகள் தாறுமாறாக அதிக வேகத்தில் செல்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பான காணொலி சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வாகன ஓட்டிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதிவேகமாக பேருந்துகளை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றதை தொடர்ந்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.  தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர்களிடையே அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அதி வேகத்தில் பேருந்தை இயக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.



இந்நிலையில், தற்போது கோவை-சத்தி சாலையில் இயக்கப்படும் பேருந்துகளும் அசுர வேகத்தில் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

குறுகலான நெடுஞ்சாலையான கோவை-சத்தி சாலையில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளை இயக்கி வருகினறனர். இது தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எதிரே வரும் வாகனங்களை பொருட்படுத்தாமல் பேருந்தின் ஓட்டுனர் ஒற்றை பாதையில் அதிவேகமாக பேருந்தை இயக்கும் காட்சி பதிவாகியுள்ளது. 

இது மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு அதிவேகமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் நடவடிக்கை எடுப்பதோடு, அந்த பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...