சிறுவாணி அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி


கோவை மாவட்டம், சிங்காநல்லூர் ஐயர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இராஜேந்திரன் (35). இவர் இன்று தனது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) மற்றும்  10 வயது மகள் தீக்ஷா ஆகியோருடன் சிறுவாணி சாலையில் இன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். 



அப்போது, ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரம் அருகே '14 ஏ' எண் கொண்ட காந்திபுரம்- செம்மேடு அரசு பேருந்து வந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அப்பேருந்து இராஜேந்திரன் குடும்பத்தினர் வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.



இந்த விபத்தில் இராஜேந்திரன், அவரது மனைவி சத்யா (30), மகன் நவீன் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி தீக்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தோரின் பிரேதங்களை மீட்டனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...