நீட் தேர்வில் மாணவர்கள் தடுமாற்றத்திற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணம்- தமிழிசை சவுந்திரராசன்

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது நீட் தேர்வில் ஆரம்ப கால சிரமங்களை தவிர்க்க மாணவர்களின் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களையும் சேர்த்து மதிப்பீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.

நீட் தேர்வில் மாணவர்கள் தடுமாற்றத்திற்கு தமிழக அரசியல்வாதிகளே காரணமென குற்றம்சாட்டிய அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மாணவர்களை தேர்வுகளுக்கு தயார்படுத்தாமல் பிரச்சனையை அரசியலாக்கி மாணவர்களை குழப்பி இருப்பதாக தெரிவித்தார்.

மாவட்டந்தோறும் நீட் எதிர்ப்பு கூட்டங்களை திமுக நடத்துவதற்கு பதிலடியாக, அடுத்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கு பாஜக சார்பில் நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமென தெரிவித்தார்.

மேலும், சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட டைரியில் தமிழக அமைச்சர்கள் பெயர் இருப்பது தொடர்பான செய்தியாளர் கேள்விக்கு, தலைமை செயலகத்திற்கே சென்று நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை இதற்கும் நடவடிக்கை எடுக்கும் என பதிலளித்தார்.

மேலும், பாஜக ஆட்சியில் குற்றம் செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்பதை சமீப கால நடவடிக்கை தெளிவு படுத்துவதாகவும், சந்தேகம் இருப்பவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி கட்சிசார்பின்றி அனைவரிடமும் பழகியவர் எனவும், அவரை ஒருசார் அரசியல்வாதியாக சுருக்க முயற்சிகள் நடப்பதாகவும், கருணாநிதி வைரவிழாவை வருங்கால கூட்டணி மற்றும் அரசியல் இலாபத்திற்காக நடத்துவதாகவும் கூறிய தமிழிசை சவுந்திரராசன், அவ்விழாவிற்கு அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டுமென தெரிவித்தார்.

இந்தி எங்கும் திணிக்கப்படவில்லை எனவும், செயற்கை இந்தி எதிர்ப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேட முயற்சிகள் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். சட்டமன்ற உறுப்பினர்களை கொத்தடிமைகளாக நடத்துவதாக ஒரு கோவை எம்.எல்.ஏ கூறியிருப்பதாகவும் தெரிவித்த அவர், கொத்தடிமைகளாக இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர் போல் செயலாற்றினால் ஆட்சி தொடரலாம் என தமிழிசை கூறினார். தற்போதைய ஆட்சி தொடர்வது என்பது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கையில் தான் உள்ளது என அவர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...