வெளிப்புற மின்சக்தி தயாரிப்புகளை இந்தியாவில் வெளியிடும் ஹஸ்வர்னா

ஹஸ்வர்னா உயர் தர மின்சக்தி தயாரிப்புகளை சங்கிலி ரம்பம், பிரஷ் கட்டர்ஸ், ட்ரிம்மர்ஸ், மிஸ்டெர்ஸ், தெளிப்பான்கள், ரைட்-ஆன் மோவர்ஸ் போன்ற குறிப்பிட்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றது. இவற்றில் பல தயாரிப்புகள் பெட்ரோல் இன்ஜினில் அல்லது பேட்டரி சக்தியூட்டப்பட்ட மோட்டார்களில் கிடைக்கின்றன.

உலகளவில் காடு மற்றும் நிலத்தை பண்படுத்தும் கருவிகளுக்கான முன்னணி நிறுவனமான ஹஸ்வர்னா தங்களுடைய வெளிப்புற மின்சக்தி தயாரிப்புகளின் வரிசையையும் காடு, பூங்கா மற்றும் தோட்டப் பராமரிப்புக்கான புதுமையான தீர்வுகளையும் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றது.



326 ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒரு தனித்துவத்தை பதித்த ஸ்வீடனைச் சார்ந்த பிராண்ட், இந்திய நிலைமைகளுக்கு சிறப்பாகப் பொருந்தக்கூடிய தரமான தயாரிப்புகளின் வலுவான ரகங்களை அளிக்கிறது. தங்கள் பல்வேறுபட்ட ரகத்திலான தயாரிப்புகளின் உற்பத்தி அதிகரிப்பிற்கு உதவுவதற்காக நவீன பொறியியலுக்கான ஹஸ்வர்னா எளிதான அணுகலை கொண்டு வர இருக்கிறது.

இதன் துவக்க நிகழ்ச்சியில் இதுகுறித்து ஹஸ்வர்னா மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் ராகவன் கூறுகையில், 

“இந்தியாவின் சந்தை ஆற்றலை நாங்கள் மதிப்பீடு செய்ததில் இந்தியா ஒரு விரைவாக வளரும் சந்தைகளில் ஒன்றாக எங்களுக்கு இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் தயாரிப்புகள் இந்தியா போன்ற கடினமான சந்தை நிலைமைகளுக்கென வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவை கடினமான வேலைகளை திறமையாக கையாள பயனர்களுக்கு உதவுகின்றன.



நாங்கள் தேர்வுசெய்த தயாரிப்புகளோடு வந்து சரியான தயாரிப்பு சரியான நுகர்வோருக்கு சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்வதற்காக டீலர்களின் நெட்வொர்க்கை வளர்த்துக்கொண்டு இருக்கிறோம். உலகளாவிய காடு மற்றும் நிலத்தை பண்படுத்தும் துறை சந்திக்கும் சவால்களில் இருந்து கற்றுக்கொண்டதால், எங்கள் திறன்வாய்ந்த மின்சக்தி சாதனங்களினால் இந்திய தொழில்முறையாளர்களுக்கும் கார்ப்பரேட் துறையினருக்கும் சிறப்பானதை அளிக்க முடியும்” என அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்த, ஹஸ்வர்னா பிரிவு உலகளாவிய தலைவர் பவேல் ஹஜ்மன் பேசுகையில், “நுகர்வோர் மீதான எங்களுடைய கவனமும் பல்வேறு சந்தைகளின் தேவைகளை சந்தித்ததினாலும் ஹஸ்வர்னா-வினுடைய வெற்றி உலக அளவில் சம்பாதிக்கப்பட்டது.



இந்தியாவில், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கு அர்ப்பணித்துள்ளோம். இனிமேல் எங்கள் உக்தியானது எங்கள் சந்தை பங்கை அதிகரிப்பதற்கு நேராக பணிசெய்து எங்கள் உலகளாவிய தொகுப்பில் பல்வேறு புதிய பிரிவுகளை சேர்த்து எங்கள் பொருள் தொகுப்புகளை விரிவுபடுத்துவதில் இருக்கும்.

ஹஸ்வர்னாவின் உடைய நிபுணர்கள் குழு வலிமையானதோடு நன்கு நிரூபிக்கப்பட்ட இயந்திரங்களில் இருந்து ஆற்றலை கண்காணிப்பதில் ஒன்றிணைந்து பணியாற்றி பேட்டரி மற்றும் ரோபோட்டிங் இயந்திரங்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை வெளியிடும் தரத்திலானவை முதல் புத்தம் புதிய தயாரிப்புகள் வரையில் பயன்படுத்தி உள்ளனர்.

தொழில்முறையாக நிலத்தை பண்படுத்துகின்றவர்களுக்கு ஆதரவு அளிக்கும்படியாக ஹஸ்வர்னாவுடைய தொழில்நுட்ப தீர்வுகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று நாங்களும் பார்த்து வருகிறோம்.” என்று கூறினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...