கொடநாடு கொலை, கொள்ளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசே காரணம்- சூலூர் எம்எல்ஏ கனகராஜ் குற்றச்சாட்டு

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணமெனவும், முதலமைச்சர் வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை எனவும் அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் செஞ்சேரி மலை அருகேயுள்ள பச்சாகவுண்டம்பாளையம் பகுதியில் ஆறுமுக கவுண்டர் என்ற தென்னை விவசாயி இரண்டு போர்வெல் போட்டும் தண்ணீர் வராததால், கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இவரது குடும்பத்திற்கு அதிமுக அம்மா அணியை சேர்ந்த சூலூர் சட்ட மன்ற உறுப்பினர் கனகராஜ் தனது ஒரு மாத எம்எல்ஏ ஊதியமான 55 ஆயிரம் ரூபாயை இன்று இழப்பீடாக வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கனகராஜ் கூறுகையில், இரண்டு போர்வெல்கள் போட்டும் தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆறுமுக கவுண்டர் குடும்பத்திற்கு தன்னால் முடிந்த சிறுதொகையினை முதலுதவியாக வழங்கி உள்ளேன். மேலும், அவரது குடும்பத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க உள்ளேன். 

தன்னை போல அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். 

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு எனது அரசான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசே காரணம். முதலமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த இடத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை. இதனால் கட்சிக்கும், தமிழக அரசிற்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. 

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் தினகரன் மீதான வழக்கு உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே அணி மாறுவதாக அறிவித்தோம். தற்போது அணி மாறும் சூழல் இல்லை. இவ்வாறு எம்எல்ஏ கனகராஜ் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...