வால்பாறை பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் பலத்தமழையால் மண் சரிவு- போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் சுமாரான அளவு மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறையில் அடிக்கடி மின்வெட்டு, தொலைபேசி சேவைகளும் பாதிப்பிற்குள்ளாகி வருவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலையில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சாலையில் மண்ணும் கல்லும் விழுந்து கிடப்பதினால் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



இதனால் அவ்வழியாக பன்னிமேடு, மளுக்கப்பாறை, புதுக்காடு, சோலையார் அணை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், ஆம்புலன்சும் தற்போது செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனிடையே, அரசு இதுவரை சாலையை சீரமைக்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். விரைவில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

சமவெளிப்பகுதியில் கோடை வெய்யில் அதிகரித்து வரும் நிலையில், வால்பாறையில் தினம் தோறும் மழை பெய்து வருகிறது. இதனால், வால்பாறை பகுதி குளிர்சியாக இருபதினாலும், தேயிலைத்தோட்டங்கள் பசுமையாக காட்சியளிப்பதாலும், சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு சில வாரங்களாக அதிகமாக வரத்துவங்கியுள்ளனர்.

கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சிமுணை, சின்னக்கல்லார் நீர் வீழ்ச்சி, நீரார் அணை, சோலையார் அணை, சக்தி தலனார் காட்சி முணை ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலாபயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...