சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் அதிகரிப்பு

கோவை தொழில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த மாவட்டம் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலும் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இங்குள்ள முக்கிய சாலை அல்லது நெடுஞ்சாலையினை ஒருநாளைக்கு சராசரியாக லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நெரிசல் அதிகம் உடைய சாலையினை பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் பயன்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே விபத்துகுறித்தான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



சாலையில் சுற்றித்திரியும் இவ்வாறான கால்நடைகளை யாரும் கண்டுக்கொள்வதில்லை. குறிப்பாக நாய்கள், மாடுகள், ஆடுகள், குதிரை போன்ற கால்நடைகள் வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. திடீரென சாலையின் குறுக்கே வரும் கால்நடைகளால் விபத்துக்களும் அதிகம் நடக்கின்றன.

வாகனங்கள் மோதி நடக்கும் விபத்துக்களை விட கால்நடைகளால் விபத்துக்கள் ஏற்படுவது கோவை, உதகை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்துள்ளது. 



குறிப்பாக இரவு நேரங்களில் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் சிக்கி அதிகளவிலான நாய்கள் நெடுஞ்சாலைகளில் இறப்பது தொடர்கதையாகி விட்டது. மேலும், உயிரிழந்த கால்நடையின் உடலின் மீது மோதும் போது வாகனத்தில் செல்பவர்களும் விபத்தில் சிக்குகின்றனர். 

கோவை மாவட்டத்தில் சாலையில் மட்டுமல்லாமல் ரயில்வே தண்டவாளங்களிலும் கால்நடைகள் சுதந்திரமாக திரிகின்றன. இதில் சில கால்நடைகள், வன விலங்குகள் மீது ரயில் மோதி பலியாகும் சம்பவங்களும் ஆங்காங்கே அடிக்கடி நிகழ்கின்றன. தண்டவாளத்தை கடக்கும் மாடுகள் மீது ரயில்கள் மோதி அதன் இன்ஜின் பழுதான சம்பவங்களும் கோவையில் உள்ளன. தெருக்களில் நாய்கள் தொல்லை இருந்தால் அவற்றை பிடிக்க ஆர்வம் காட்டும் மாநகராட்சி நிர்வாகம், மாடுகள், குதிரைகளை கண்டுக்கொள்வதில்லை.



மேலும், உதகை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் குதிரை சவாரியில் பயன்படுத்தப்படும் குதிரைகளும் காலப்போக்கில் வயதான பின் சாலையில் விடப்படுகின்றன. இவை கேட்பாறின்றி ஆங்காங்கே சுற்றி வருகின்றன. இதனிடையே, மாநகராட்சி நிர்வாகத்தால் தெருவில் சுற்றிவரும் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அந்த சிகிச்சை முறையினையும் மாநகராட்சி தற்போது செயல்படுத்துவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மனிதனால் விலங்குகள் வதைக்கப்படுவதாக கூறி வாதாடிவரும் விலங்குகள் நல அமைப்புகளும், தன்னார்வ அமைப்புகளும் இவ்வாறான சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளின் மீதும் கனிவு காட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...