டாஸ்மாக் வேண்டாம் என்ற விருப்பத்தை கிராம சபை மூலமாக கூட நிறைவேற்ற முடியாத நிலை- மக்கள் வேதனை


கிராம சபை என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். கடந்த 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3-ன் படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படுகிறது. 

இந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை திட்டமிடுதல், வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைகளை வெளிப்படுத்தலாம். மேலும், ஆலோசனைகளை தீர்மானமாக்கி அவற்றை நிறைவேற்றும் அதிகாரமும் உண்டு.

கிராம ஊராட்சிகள் ஆண்டுக்கு 4 முறை கிராம சபை கூட்டத்தினை நடத்த வேண்டும். அதன்படி, ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

அந்த வகையில், கோவையை அடுத்த மதுக்கரை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று கிராம சபைக் கூடம் நடைபெற்றது.

இதில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு, ஊராட்சி பகுதிக்குள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கூறி தீர்மானத்தை முன்வைத்தனர். ஆனால், அப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகர் அந்த தீர்மானத்தை ஏற்க மறுத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சுஜாதா என்பவர் கூறியதாவது:-

கிராம சபைக் கூட்டம் என்பது மக்கள் கையில் அதிகாரத்தை கொடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ஒரு நல்ல திட்டம். இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் சுப்ரீம் கோர்ட் கூட தலையிட முடியாது என்பது சட்டம். அப்படியான கிராம சபை கூட்டத்தில் மக்கள் கொண்டுவரும் தீர்மானங்கள் அதிகாரிகளால் ஏற்கப்படுவது இல்லை. தீர்மானங்கள் படித்துவிட்டு செல்லும் அளவிலேயே இருக்கிறது.

மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மே 1 அன்று நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மகளிர் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மலுமிச்சம்பட்டி ஊராட்சி டாஸ்மாக் இல்லாத ஊராட்சியாக வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து அதை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரிடம் கொடுத்தோம். அதை அவர் ஏற்கவில்லை. மாறாக மனுவாக எழுதி தர கோரினார்.

கிராம சபைக்கு இருக்கும் தனித்துவமே அதன் அதிகாரம் தான். அனால், இங்கு அதிகாரிகள் மக்கள் கொண்டுவரும் தீர்மானகளை ஏற்பது இல்லை. இதனால், மக்கள் உரிமை என்பது பெயரளவிலேயே இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று சுஜாதா தெரிவித்தார்.

நல்ல முடிவுகளை தீர்மானங்களாக மக்கள் கொண்டுவரும் நேரத்தில் அதை அதிகாரிகள் நிராகரிப்பது மக்களிடத்தில் அரசின் மீதான அதிருப்தி அலைகளை உண்டாக்கும். இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு கிராம சபைகளின் உரிமைகளை மீட்டு கொடுக்கும்பட்சத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் வாழும் மக்கள் மன நிறைவுடன் வாழ்வர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...