கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சயனிடம் கேரள போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை

கோவை மாவட்ட காவல் காணிப்பாளர் ரம்யபாரதி அனுமதியின் பேரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சயனிடம் கேரள போக்குவரத்து பிரிவு போலீசார் சுமார் அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சயன் என்பவர் விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இரண்டு முறை சயனையிடம் விசாரணை மேற்கொள்ள கேரள போலீசார் முயன்ற போது மருத்துவ நிர்வாகம் மறுத்து வந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி அனுமதியளித்ததின் பேரில் இன்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கடந்த 28 ஆம் தேதி பழனி சென்று முருகனை குடும்பத்தோடு தரிசனம் செய்துவிட்டு சரியான தூக்கம் இல்லாததால் ஆங்காங்கே தனது காரை நிறுத்தி தூங்கியதாகவும், இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி வந்து மீண்டும் சாப்பிட்டு விட்டு தூங்கியதாகவும், பின்னர் அதிகாலையில் காரை எடுத்துக் கொண்டு திருச்சூர் செல்லும்போது விபத்து நடந்ததாகவும் சிகிச்சை பெற்று வரும் சயன் பாலக்காடு போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் விபத்து குறித்து மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக பேசுக்கூடாது என தமிழக காவல்துறை கேரள போலீசாரிடம் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலை முதல் காத்திருந்த கேரள போலீசார் தற்போது விசாரணையை முடித்துக்கொண்டு மருத்துவமணையின் பின்பக்க வழியாக புறப்பட்டு சென்றனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...