வனக்கல்லூரியில் நடமாடும் காற்று மாசு அளவீட்டு ஆய்வகம் துவக்கம்

மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சுற்றுச்சூழல் மாசுபடுதலை தடுக்க நகர வனவியலுக்கான கொள்கை பயிலரங்கு என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்தில் நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலை வளர்ச்சியடைதலால் ஏற்படும் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசடைவதால் உண்டாகும் விளைவுகளை எதிர்கொள்வதற்காக நகர்ப்புற மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் அதற்கான கொள்கைகளை வகுப்பதற்கான கலந்துரையாடல் நிகழ்தது.



தற்போது உலகம் மிக வேகமான நகர மயமாக்கத்தை கண்டு வருகிறது. நகரங்களில் மரங்களும் இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் தொழிற்பேட்டைகளாகவும் வளர்ந்து சுற்றுச்சூழலில் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நீண்ட இடைவெளி உருவாகி மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பெரும் கேடு உண்டாகிறது.

நகரமயமாக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் குறைக்க நகரங்களில் மரங்களை வளர்க்க வேண்டும். நகர்புற மரங்கள் நகரவாழ்வின் தரத்தை உயர்த்தும். நகரங்களில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தையும் அவற்றின் தேவைகுறித்த கொள்கைகளை ஏற்படுத்தவும் இந்த ஒருநாள் கருத்தரங்கு பெரிதும் உதவி செய்யும்.



நகர்ப்புற மக்கள் எதிர்கொள்ளும் உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கம் மற்றும் நகர்ப்புற பசுமைமயமாக்குதல் மூலம் இதற்கு தீர்வு காணுதல் குறித்தும் இந்தகருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

நகரங்களில் பசுமை பகுதிகளை அதிகப்படுத்துவதன் மூலம் நகரங்களில் உயிர்பன்மை பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கருத்தரங்கில், நகர்புற மாசு கண்காணிப்பு மற்றும் நிர்வாகம், நகர்புற பசுமை எழில் ஊட்டுதல் மற்றும் நகர்புற மாசுகட்டுப்பாடு குறித்து கொள்கைகள் வரையறுக்கப்பட்டது.



இந்தக் கருத்தரங்கில் 120க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த துறையில் வல்லுநர்களான ஜி.சந்திரசேகரன், முன்னாள் துணை வனப்பாதுகாப்பாளர் (தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியகம், கோயம்புத்தூர்) சி.புவனேஸ்வரன் (முதுநிலை விஞ்ஞானி) பி.டி.உமாசங்கர், முதன்மை ஆலோசகர் (சுற்றுப்புறம் மற்றும் சூழலியல் மையம் சென்னை) இரவிக்குமார் சர்வதேச ஆலோசகர் - வனக்கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு, பிசிஐ இந்தியா ஆகியோர் நகர்ப்புறக் காடுகள் குறித்த பிரச்சனைகளை விவாதித்து கொள்கை முடிவுகளை வரையறுத்தனர்.

இவ்விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி கலந்து கொண்டு முதன்மையுரை வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் தமிழ்நாடு வனவியல் உயர் பயிற்சியக கூடுதல் முதன்மை வனப்பாதுகாப்பாளர் மற்றும் இயக்குநர் ராஜிவ் மு ஸ்ரீவஸ்தவா நிகழ்ச்சியை தலைமை தாங்கி நடத்தினார்.



சென்னை தமிழ்நாடு நீர்வடி மேலாண்மை மற்றும் நிலப்பயன்பாட்டு அபிவிருத்தி மைய செயற்குழு இயக்குநர் ஆனந்தகுமார் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, இந்தியாவில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற காற்று மாசினை நிகழ் நேரத்தில் கண்காணிக்கும் முன்மாதிரி உயர்தர நடமாடும் காற்று மாசு அளவீட்டு ஆய்வகத்தினை திறந்து வைத்து உபயோகத்திற்கு உட்படுத்தினார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...