பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை பிரிவின் 20வது தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு.

தமிழக அரசு நிலையான முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால் கட்டுமான தொழில் பாதிக்கபட்டுள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா குற்றசாட்டு.

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. கட்டுமான துறை கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.இதற்கு தமிழக அரசு நிலையான முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தனர். கட்டுமான துறையில் சில சிக்கல் ஏற்பட்டால் பல்வேறு அரசு துறைகளை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால தாமதம் மற்றும் நேரம் விரயமாவதாகவும் கூறியவர்கள் கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை. வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



மேலும் ஒற்றை சாளர முறையை கட்டுமானங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க வலியுறுத்தினர்.சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் ஆற்று மணலை தவிர்த்து கட்டுமான தொழிலில் செயற்கை மணலை அதிகம் உபயோகிக்கபட வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் ஆற்று மணல் விலையை ஒப்பிடும்போது செயற்கை மணலின் விலை குறைவு என தெரிவித்தவர்கள் மணலின் தரத்தை அரசு உறுதி செய்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தற்போது மஹாராஷ்ட்ரா,கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆற்று மணல் தவிர்த்து செயற்கை மணல் மூலமே கட்டுமான தொழில் நடைபெறுவதால் இயற்கை வளம் பாதுகாக்கபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் கட்டுமான துறையில் திறன்மிகு தொழிலாளர் பற்றாகுறை நிலவுவதாக தெரிவித்தவர்கள் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக கூறினர். இன்று மாலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை பிரிவு 20வது தலைவராக ராஜவேல் அவர்களும் துனை தலைவராக சின்னசாமி,செயலாளராக சிவராஜன்,துனை செயலாளராக பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தேசிய தலைவர் விஜய ராகவ ரெட்டி பதிவி பிரமானம் செய்து வைக்க உள்ளார்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...