மது குடித்துவிட்டு வேலை செய்த கட்டிட தொழிலாளி மரணம்

திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியை சேர்ந்தவர் பிளிஸ்ராஜ். இவர் நல்லே கவுண்டன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். 

மது அருந்தும் பழக்கம் கொண்ட பிளிஸ்ராஜ்(31) கடந்த 24-ம் தேதி மது குடித்துவிட்டு பணிக்கு சென்றுள்ளார். மது போதையில் கட்டியத்தின் மேற்கூரையில் வேலை செய்து கொண்டிருந்த பிளிஸ்ராஜ் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். 

இதில், பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதைதொடர்ந்து பிளிஸ்ராஜின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து கோவைக்கு வந்த பிளிஸ்ராஜின் சகோதரர் ஜேசுராஜ் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிளிஸ்ராஜ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...