கோவை கொடிசியாவில் 2 நாள் டென்டல் லேப் எக்ஸ்போ மற்றும் கருத்தரங்கம்


ஐவரி கண்காட்சி மற்றும் கைடன்ட் நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் முறையாக டென்டல் லேப் எக்ஸ்போ மற்றும் கருத்தரங்கம் கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக பல் சிகிச்சை துறையில் உலகமெங்கும் உள்ள மருத்துவர்களும், வல்லுநர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று தங்களின் அனுபவங்களையும், அறிவையும் பகிந்துகொள்ள உள்ளனர். இத்தகைய கருத்தங்கம் மற்றும் கண்காட்சி பல் மருத்துவர்கள் மற்றும் அந்தத் துறை சார்ந்துள்ள தொழில்நுட்ப வல்லநர் தங்களின் அறிவை விஸ்தரித்துக் கொள்ள உதவியாக இருக்கும். மேலும், பல் சிகிச்சை சார்ந்த துறை மேம்பாட்டுக்கும் இந்தக் கருத்தரங்கம் உறுதுணையாகும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தக் கருத்தரங்கில் பல் சிகிச்சை துறை சார்ந்த 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உரையாற்ற உள்ளனர். மேலும், கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அரங்குகளில் பல் சிகிச்சையில் புதிதாக வந்துள்ள நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளும், சிகிச்சை முறைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்தக் கண்காட்சி ஒருங்கிணைப்புக் குழுவில் நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம்பெறவுள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி துணை முதல்வர் வி.ஆர்.திருமூர்த்தியும், மும்பையில் பிரபல பல் மருத்துவராக உள்ள சந்தோஷ் மயக்கர் ஆகியோர் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு தலைமை வகிக்க உள்ளனர்.

டேன்டல் கல்லுரி மதுரா டீனும், கைடன்ட் இதழ் ஆசிரியருமான மருத்துவர் மனீஷ் ரஹோரி கண்காட்சி ஒருங்கிணைப்பு செயலாளராக உள்ளார். ஹைதராபாத் பிரபல மருத்துவராக உள்ள மகேந்திரநாத் ரெட்டி கண்காட்சி அறிவியல் கமிட்டி தலைவராக உள்ளார். பெங்களூர் கான்பிடென்ட் ஆய்வகத்தின் இயக்குநர் கமிட்டியின் துணைத் தலைவராக உள்ளார். கருத்தரங்கின் புரவலர்களாக முன்னாள் ராணுவ வீரர் அன்வரீன் கானி, ஆர்விஎஸ் டென்டல் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் பி.ராஜ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி அறங்காவலர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு மாநில பல் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், கர்நாடக மாநில பல் சிகிச்சை ஆய்வகங்களின் சங்கம், மகாராஷ்டிரா டென்டல் மெக்கானிக்ஸ் சங்கம், குஜராத் பல் சிகிச்சை ஆய்வகங்களின் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்கவுள்ளார். இந்திய டென்டல் கவுன்சில் செயற்குழு உறுப்பினராக உள்ள மருத்துவர் சுரேஷ் குமார் கதரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...