மனதை மயக்கும் உதகை பைகாரா நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்


நீலகிரி மாவட்டம், உதகை பைகாரா அருவி நீர்வீழ்ச்சி சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசிதிபெற்றதாகும். இயற்கை எழில்கொஞ்சும் இதன் அழகை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவர். 

இதனிடையே, தமிழகம் முழுவதும் கடந்த அண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், சரிவர பருவ மழை பெய்யாததன் காரணமாக பசுமை நிலங்கள் வறண்டு காணப்படுகிறது.



இந்நிலையில், தற்போது வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மலைப் பகுதிகளில் சற்று குளுமையான சீதோஷனம் நிலவிவருகிறது.

உதகையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி அங்கமைந்துள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் நிர்வரத்து இல்லாமல் முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த இரு மாதமாக பைகாரா நீர்வீழ்ச்சியில் செய்யப்பட்டு வந்த மின்உற்பத்தியும் தடைபட்டிருந்தது. 



இந்நிலையில், தற்போது பைகாரா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக, பைகாரா நீர்வீழ்ச்சியில் நீர் திரண்டு ஓடிவருகிறது. வெயில் வாட்டி வரும் வேளையில் இந்த குளுகுளு காட்சியினைக் காண சுற்றுலா பயணிகளின் குவிந்து வருகின்றனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...