கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்று தெரிந்துகொள்ள ஆர்வமுடன் கோவை ரசிகர்கள்!


எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி நாளை திரைக்கு வரவுள்ளது. உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் திரைப்படவுள்ள பாகுபலி படத்தின் 2-ம் பாகம் சுமார் ரூ.480 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும். பாகுபலி 2 திரைப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

கதைச் சுருக்கம்: மகிழ்மதி எனும் ராஜ்யத்திற்காக போராடும் சகோதரர்கள் பற்றிய கதை. கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகத்தினைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் 'பாகுபலி 2' நாளை வெளியாக உள்ளது. உலக சினிமாவின் தரத்தை உயர்த்தி எண்ணற்ற சாதனைகளை படைத்த இப்படத்தின் 2-ஆம் பாகத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காண காத்திருக்கிறது. சுமார் 2 நிமிடம், 23 வினாடிகள் வரும் டிரைலரில் மகிழ்மதி ராஜ்யம், தேவசேனா- அமரேந்திர பாகுபலியின் காதல், சகோதரத்துவம், பகை, பழிவாங்குதல் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.



பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா ஆகியோரின் கண் பார்வையிலேயே நேர்த்தியான நடிப்பு வெளிப்படுவதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

பாகுபலி 2 இந்திய இயக்குநர்களால் மிகப்பெரிய பிரம்மாண்டமான கனவு திரைப்படங்களில் ஒன்றாக உருவாக்கபட்டுள்ளது. மேலும், இன்று தவிர்க்க முடியாத ஒரு படமாக இது இருக்குமானால் நாளை அது கிளாசிக் பட வரிசைகளில் இருக்கும் என எதிப்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கோவை ரசிகர்கள் கூறுகையில், இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மிகப் பிரம்மாண்டமான படம் பாகுபலி. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி இந்தியா மட்டுமில்லாது உலக நாடுகளிலும் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தது.

இந்நிலையில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி 2' படத்தில் 'கட்டப்பா ஏன் பாகுபலி'யை கொன்றார்?' எனும் கேள்விக்கு விடை என்ன என்பதை காண காத்திருக்கும் ரசிகர்களின் எதிர்ப்பர்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக படக்குழுவினர், 'பாகுபலி 2' குறித்து ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே, இப்படத்தின் 2ஆம் பாகத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே காண காத்திருக்கிறது. இப்படத்தை காணும் ஆர்வத்தில் டிக்கெட் எடுப்பதற்கு காலையில் இருந்து மாலை வரை நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்' என்றனர்.

கோவையில், அனைத்து திரையரங்குகளிலும் நாளை பாகுபலி 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்க டிக்கட் இணையதளங்கள் அனைத்திலும் டிக்கட் விற்றுத் தீர்ந்துவிட்டது. அனைத்து திரையரங்குகளிலும் கூட டிக்கட் 'ஹாஸ்புல்'. ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே ஓப்பன் டிக்கெட் விற்பனை ஆக உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பாகுபலி 2 திரைப்படம் 5 காட்சிகளாக திரையுடவுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...