கோவை மாவட்ட பத்திரிகையாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஒத்திவைப்பு

தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற ஏப்ரல் 27ம் தேதியன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த மருத்துவமுகாம் விரைவில் நடைபெறும் எனவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...