திடக் கழிவு மேலாண்மை குறித்து 'நமது வார்டும் நமது வீடே' சார்பில் கலந்துரையாடல்

'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27-வது வார்டு பகுதியில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டம் செயல்பட்டு வருகிறது.



அத்திட்டத்தின் 8-வது வாராமாக ஐடிசி பிரதிநிதிகள், வார்டு சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்களுடன் திடக் கழிவு மேலாண்மை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் பின்புறம் உள்ள புதர்கள் அகற்றப்பட்டது. இப்பணிகளில் நமது வார்டும் நமது வீடே அமப்பினருடன் இணைந்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களும் பணியாற்றினர்.



மேலும், இதன் ஒரு பகுதியாக சின்ன வேடம்பட்டியில் உள்ள குளத்தினை தூர் வாரவும், அங்குள்ள கருவேல மரங்களை அழிக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சின்ன வேடம்பட்டி குளத்தில் தூர்வாரும் பணி துவங்கப்படும் என நமது வார்டும் நமது வீடே ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.



Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...