தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐசிசிஐ

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. மேலும் தமிழக விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஏப்ரல் 25) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், நடிகர் சங்கம், ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர்-வும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் தலைவர் வனிதா மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த போராட்டத்திற்கு ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் முழு ஆதரவு அளிக்கிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர்கள், லாரி, ஓட்டல் உரிமையாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியான திமுக-வும் ஆதரவு அளித்திருப்பதால் இந்த முழுஅடைப்பு வேலைநிறுத்தம் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகப்படியாக உள்ளது.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்பதை வார்த்தைகயால் மட்டுமின்றி நடப்பிலும் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என வனிதா மோகன் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...