கோவையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 285 வழக்குகள் பதிவு

கோவை மாநகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் தலைகவசம் அணியாத 2456 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகரில் விபத்து குறைப்பு தொடர் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் கோவை மாநகர காவல் துறை சார்பாக கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவை மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு காவல்துறையினரால் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டிய வாகன ஓட்டுநர்கள் மீது கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 285 வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது.

மேலும், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2456 வழக்குகள் பதிவு செய்து அபராதத் தொகையாக ரூ.2 லட்சத்த 45 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்கச் செய்து அவற்றை "விபத்தில்லா வார இறுதி நாட்களாக்க" நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...