வார இறுதியில் சுற்றுலா செல்வோம் பரளிக்காட்டிற்கு!

கோவையில் இருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பரளிக்காடு சுற்றுலாத்தலம். காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒரு மலைக்கிராமம் தான் இந்த பரளிக்காடு. முழுக்க முழுக்க மலை வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்ட பரளிக்காட்டில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன.



பில்லூர் அணைக்கு செல்லும் நீர்பாதையில் இருந்து 2 கி.மீ தூரத்திற்கு பரிசல் சவாரி, மலையேற்றம் மற்றும் அத்திக்கடவு அருவி குளியல் முதலானவற்றை மலைவாழ் மக்களின் உதவியோடு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது காரமடை வனச்சரகம்.

இதற்காக சுற்றுலா பயணிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று அந்த தொகை முழுவதும் அம்மலை வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர் அங்குள்ள வன அதிகாரிகள். வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கோடை விடுமுறையை தொடர்ந்து பரளிக்காடு சுற்றுலா செல்லும் பயணிகள் தங்கள் முன்பதிவுகளை செய்த வண்ணம் உள்ளனர்.



பரளிக்காடு குறித்து காரமடை வனச்சரக வனவர் சுரேஷ் கூறுகையில், ‘பொருளாதார ரீதியான பிரச்சனைகள் மலைவாழ் மக்களுக்கு ஏற்படும் போது அவர்கள் எந்த ஒரு தவறான பாதையிலும் சென்றுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் பரளிக்காடு சுற்றுலாத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் தொகை முழுவதும் மலைவாழ் மக்களின் கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.



இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மலைவாழ் மக்களே உணவு அளிக்கின்றனர். அதோடு, பரிசல் சவாரி மற்றும் மலையேற்றம் போன்ற கேளிக்கைகளும் உள்ளன. பயணிகள் தங்குவதற்கு விடுதியும் தற்போது கட்டப்பட்டுள்ளது" என்றார்.



தொடர்ந்து, தற்போது அங்கு சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு, வன விலங்குகளை பார்வையிட, மகிழ மரங்களின் மீது பரன்களும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுற்றுலா செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். தமிழ்நாடு வனத்துறையின் இணையதள பக்கத்தின் மூலம் இந்த முன் அனுமதியை பெற முடியும். விடுமுறையை முழுமையான இயற்கையோடு செலவிட நினைப்பவர்கள் ஒரு நாள் பரளிக்காடு சுற்றுலா செல்லலாம்..!

பரளிக்காட்டை போல கூச்சமரத்தூர் என்ற பகுதியும் சுற்றுலா செல்ல உகந்த இடமாக உள்ளது. இந்த பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் இரவு நேரத்தில் தங்கும் வகையிலான விடுதிகள் தற்போது தயாராகி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...