கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுவாழ்வு பெற்ற அரசமரம்

கோவை மாவட்டம், காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி பார்க்கேட் அருகில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 



இதற்காக, அப்பகுதியில் இடையூராக இருந்த சுமார் 60 ஆண்டுகால பழமைவாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் முடிவுசெய்துள்ளனர். 

பின், அதனை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்க முடிவு செய்த நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்து காவல்துறையினர் ஆகியோர் ஓசை அமைப்பின் சையது அவர்களைத் தொடர்புகொண்டு மரத்தினை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் நட உதவிகோரியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, ஓசை சையது தலைமையிலான அமைப்பினர் மற்றும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் இணைந்து அந்த அரச மரத்தினை வேருடன் அகற்றி கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் மறுநடவு செய்தனர்.



மரம் மறுநடவு செய்யப்பட்டு ஒருவார காலத்திலேயே தற்போது துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளது இப்பணியில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினரையும், சமூக ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...