குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் கோவை மாவட்டத்தில் 186 கடைகள் மூடப்பட்டது.

இதனிடையே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில் கூடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் காந்தி நகர் சிவசக்தி காலணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைக்க தடை விதிக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்.

சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

இதேப்போல் வெங்கட்டாபுரம் 13-வது வார்டுக்கு உட்பட்ட என்.எஸ்.ஆர் ரோடு பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக கடை நீதிமன்ற உத்தரவையடுத்து மூடபட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கடையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...