நாடு முழுவதும் ஒரேமாதிரியான நலத்திட்ட உதவிகள் வழங்கக் கோரி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாலர்கள் தர்ணா


கட்டிட தொழிலாலர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கட்டிட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கட்டிட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலதிட்டங்கள் ஒரே மாதிரி கிடைக்க சட்டம் அமலாக்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தலைநகர் தில்லியில் கட்டிட தொழிலாளர்களின் குழந்தைகளின் முழு கல்வி செலவினங்களையும் அரசு ஏற்று செயல்படுத்தி வருவது போல மற்ற மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும். 2011ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த ஓய்வூதிய அரசாணையை நிறைவேற்ற வேண்டும். அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் தலைமையில் 100-கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...